தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி

எழுத்தாளர் Bella Dalima

20 Dec, 2016 | 1:51 pm

கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு முறைமைகளில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தபால் ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்து சுற்றறிக்கையொன்று விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் கூறியுள்ளது.

முறையான சேவையை முற்கொண்டு செல்வது தொடர்பில் பிரதி தபால் மா அதிபர்கள் மற்றும் பிராந்திய தபால் அத்தியட்சகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்