அலெப்போ நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை மீள ஆரம்பம்

அலெப்போ நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை மீள ஆரம்பம்

அலெப்போ நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2016 | 5:35 pm

சிரியாவின் அலெப்போ நகரத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு அலெப்போவில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் அம்பியூலன்ஸ்கள் மற்றும் பஸ்களில் வெளியேறி வருகின்றனர்.

குறைந்தது 500 பேர் வரை சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அலெப்போவிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்காக சிரிய அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டிருந்த பஸ்கள் கிளர்ச்சியாளர்களினால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தத்தில் முறிவு ஏற்பட்டது.

ஆயிரக் கணக்கான மக்கள் நம்பிக்கையிழந்த நிலையில் கிழக்கு அலெப்போவில் இருந்து வெளியேறுவதற்கு காத்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவின் கண்காணிப்பு குழுவொன்றை மக்கள் வெயியேற்றப்படும் பகுதிகளுக்கு அனுப்புவதற்கான அனுமதி தொடர்பான சமரச ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் ஐ.நா பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்