பெண்ணை சித்திரவதைக்கு உட்படுத்திய ஹோமாகம குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

பெண்ணை சித்திரவதைக்கு உட்படுத்திய ஹோமாகம குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

பெண்ணை சித்திரவதைக்கு உட்படுத்திய ஹோமாகம குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 4:51 pm

பெண் ஒருவரை சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டியிலுள்ள வீட்டுக்குள் புகுந்து பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக அவர் செயற்பட்ட போதே குறித்த பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பெண் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்பவர் எனவும் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்