2017 ஆம் ஆண்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர் விவசாயிகள்

2017 ஆம் ஆண்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர் விவசாயிகள்

2017 ஆம் ஆண்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர் விவசாயிகள்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 9:11 pm

2017 ஆம் ஆண்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் மற்றும் உரத்தட்டுப்பாடு காரணமாக இம்முறை பெரும்போக நெற்செய்கைக்கான அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ளமுடியாது போகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை பெரும்போக நெற்செய்கை அறுவடை அரைவாசியாகக் குறைவடையும் நிலை காணப்படுகின்றது.

அதிகளவில் நெல் பயிரிடப்படும் பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இம்முறை பெரும்போக நெற்செய்கை குறைந்தளவிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

குருணாகல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் வயல் காணியில், சுமார் 19 ஆயிரம் ஏக்கரில் மாத்திரமே நெற் செய்கை பண்ணப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் 8 இலட்சம் ஏக்கர் வயல் காணியில் 90 வீதமான பகுதியிலேயே பயிற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்