முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பதவி விவகாரம்: இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பதவி விவகாரம்: இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 8:38 pm

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி விவகாரம் தொடர்பில் இன்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

செயலாளர் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி, செயலாளர் மொஹம்மட் மன்சூர் மற்றும் கல்முனை மாநகர சபை மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோர் இன்று தேர்தல்கள் செயலகத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, தேர்தல் அலுவல்கள் தொடர்பிலான நியதிச் சட்டங்களின் படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரான மொஹம்மட் மன்சூருடன் தொடர்புகளைப் பேணுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தன்னை தொடர்புகொள்ள முடியும் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மொஹம்மட் மன்சூர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலியிடம் நியூஸ்பெஸ்ட் தொடர்பு கொண்ட போது, இது தொடர்பில் தனக்கு கருத்து தெரிவிக்க முடியாது எனவும் கட்சியின் தலைவரைத் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்