மலேசியப் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை

மலேசியப் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 4:02 pm

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டுப் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முற்பகல் மலேசியா பயணமானார்.

மலேசிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அந்நாட்டிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பல்வேறு பரிமாணங்களை எட்டுவதற்கான வாய்ப்புகள் இந்த விஜயத்தின் போது அமையும் என நம்பப்படுகின்றது.

மேலும், ஜனாதிபதியின் இந்த வருடத்திற்கான இறுதி வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்