பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 4:43 pm

எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விசாரணைகளின் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுவதில்லை என பொலிஸார் அறிவித்துள்ளதாக கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன இன்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனமொன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பல தடவைகள் வாக்குமூலம் வழங்குவதற்கு ஆஜராகாமையால் நீண்ட வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய தேவை உள்ளதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தனர்

இதற்கு முன் கடந்த 04 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அழைக்கப்பட்டிருந்த போதும், தலதா மாளிகையில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளதால் ஆஜராக முடியாது என விமல் வீரவன்ச அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

எனினும், அன்றைய தினம் தலதா மாளிகையில் எவ்வித நிகழ்வுகளும் இடம்பெறவில்லை என பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்