பெய்ஜிங்கில் அபாய நிலையில் காற்று மாசு: ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பெய்ஜிங்கில் அபாய நிலையில் காற்று மாசு: ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பெய்ஜிங்கில் அபாய நிலையில் காற்று மாசு: ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 6:00 pm

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதனால் அங்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான டியான்ஜின், ஹேபோ ஆகிய பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது.

இதைக் கட்டுப்படுத்த பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒற்றைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை திகதிகளிலும் இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படை திகதிகளிலும் இயக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பெய்ஜிங் முழுவதும் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு 21 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரம் வரை காற்று மாசின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதன்பிறகு காற்று மாசு குறைந்தால் சிவப்பு எச்சரிக்கை நிலை திரும்பப் பெறப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்