பீத்தாவ கிராம மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுத்தது மக்கள் சக்தி

பீத்தாவ கிராம மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுத்தது மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 10:08 pm

கேகாலை, யட்டியாந்தோட்டை – பீத்தாவ கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய பிரச்சினைக்கு இன்று தீர்வு வழங்கப்பட்டது.

யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பீத்தாவ கிராம மக்கள், குடிநீர் திட்டம் இன்றி பல வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு இன்றியும் இந்த கிராம மக்கள் அல்லல்படுகின்றனர்.

சிறு நீர்மின் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இணைந்து இந்த கிராம மக்களுக்கான நீண்டகால நீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மக்கள் சக்தி நேரடியாக முன்வந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்