பலாங்கொடையில் தனியார் பஸ் லொறியுடன் மோதி விபத்து: சாரதி உயிரிழப்பு, 9 பேர் காயம்

பலாங்கொடையில் தனியார் பஸ் லொறியுடன் மோதி விபத்து: சாரதி உயிரிழப்பு, 9 பேர் காயம்

பலாங்கொடையில் தனியார் பஸ் லொறியுடன் மோதி விபத்து: சாரதி உயிரிழப்பு, 9 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 4:30 pm

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

பலாங்கொடை – எல்லபொல பகுதியிலேயே இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று கொழும்பிலிருந்து பலாங்கொடை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதி பலாங்கொடை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸில் பயணித்த ஒன்பது பேர் சிறுகாயங்களுடன் பலாங்கொடை தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பலாங்கொடை – பெட்டிகலை பகுதியைச் சேர்ந்தவர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்