திஸ்ஸ அத்தநாயக்கவின் வெளிநாட்டு பயணக் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

திஸ்ஸ அத்தநாயக்கவின் வெளிநாட்டு பயணக் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

திஸ்ஸ அத்தநாயக்கவின் வெளிநாட்டு பயணக் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 3:52 pm

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் வெளிநாட்டு பயணக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவசர தேவைக்காக பிரதிவாதி வெளிநாடு செல்வதற்கு கோரிக்கை விடுக்கவில்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன இன்று அறிவித்தார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஜனவரி 13 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு அனுமதி கோரி திஸ்ஸ அத்தநாயக்கவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அடுத்த வழக்கு விசாரணையின் போது பரீசீலிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் வசந்த சமரசிங்க பண்டார, திஸ்ஸ அத்தநாயக்கவின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போலி ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பான வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதால், திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்