சுமார் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ். நகரில் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்படுகிறது

சுமார் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ். நகரில் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்படுகிறது

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 9:53 pm

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் யாழ். நகரில் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை – இந்திய அரசாங்கத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கலாசாரம் மண்டபம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், சுமார் 1.2 பில்லியன் ரூபா செலவில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டட நிர்மாண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்