களுத்துறையில் பொலிஸார் சுற்றிவளைப்பு: 1000 ஹெரோயின் பக்கெட்டுக்கள் கைப்பற்றல்

களுத்துறையில் பொலிஸார் சுற்றிவளைப்பு: 1000 ஹெரோயின் பக்கெட்டுக்கள் கைப்பற்றல்

களுத்துறையில் பொலிஸார் சுற்றிவளைப்பு: 1000 ஹெரோயின் பக்கெட்டுக்கள் கைப்பற்றல்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 4:21 pm

களுத்துறை – தொடங்கொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1000 ஹெரோயின் பக்கெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

களுத்துறை சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது முச்சக்கரவண்டி ஒன்றுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பக்கெட் ஒன்றின் பெறுமதி 600 ரூபாவாகும்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்