கருணாநிதிக்கு மூச்சுத்திணறலை சீர்செய்யும் சிகிச்சை வழங்கப்படுகிறது

கருணாநிதிக்கு மூச்சுத்திணறலை சீர்செய்யும் சிகிச்சை வழங்கப்படுகிறது

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 9:44 pm

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதிக்கு மூச்சுத்திணறலை சீர்செய்யும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அந்நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மூச்சுத்திணறலை சீர்செய்ய டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்படுவதாக கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி 15 ஆம் திகதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவருக்கு பிரத்தியேக மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் குறித்த தனியார் மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்