எனக்கு காதலி இல்லை, தேடித்தாருங்கள்: நாமல் ராஜபக்ஸ

எனக்கு காதலி இல்லை, தேடித்தாருங்கள்: நாமல் ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 7:58 pm

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமான ஹலோ கோப் மற்றும் கவசர் ஆகிய நிறுவனங்களுக்கான சொத்துக்களை சேகரித்த முறை குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, நாமல் ராஜபக்ஸவின் காதலியின் வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியதாகப் பரவும் வதந்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு நாமல் ராஜபக்ஸ பின்வருமாறு பதிலளித்தார்,

[quote]எனக்கு காதலி இல்லை. அவ்வாறு ஒருவர் உள்ளார் என்றால் தேடித்தாருங்கள். ஊடக சந்திப்பொன்றில் பொலிஸ் மா அதிபருடன் ரவி கருணாநாயக்க கலந்துரையாடிய முறை தொடர்பில் நான் அவதானித்தேன். தற்போது பொலிஸ் மா அதிபர் எவ்வளவு சுயாதீனமாக செயற்படுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு சேறு பூசுங்கள் என்று அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார். வீதியிலுள்ள வௌ்ளைக் கோட்டை மீறிய பிள்ளைகளை ஆராய்கின்றீர்கள். ஆனால் அரசாங்கத்திற்கு 145 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்திய மத்திய வங்கி ஆளுனரைத் தேடவில்லை. நவம்பர் மாதம் 37 கொலைகள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஆராய்வதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் வீதியின் வௌ்ளைக் கோட்டை மீறுவது தொடர்பிலேயே பொலிஸ் மா அதிபர் ஆராய்கின்றார்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்