இலங்கையில் கைதாகியுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் கைதாகியுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 8:20 pm

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது இந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மீனவர்கள் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் பட்சத்தில் பெருந்தொகை அபராதம் விதிக்கும் வகையில் இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள சட்டத்திற்கும் இன்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் தமது மீனவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

இதனால் குறித்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது ஏற்கனவே இலங்கை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டு கடலில் மூழ்கிய 18 படகுகளுக்கு மத்திய மாநில அரசுகள் இழப்பீ்டு வழங்க வேண்டும் என இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்