அடப்பன்குளம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

அடப்பன்குளம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

அடப்பன்குளம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2016 | 5:14 pm

வீட்டுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியா – அடப்பன்குளம் மக்கள் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சுமார் 100 குடும்பங்கள் வசித்து வரும் அடப்பன்குளம் கிராமத்தில் 20 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை எனவும் தமக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் வேறு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை சுமார் 8 மணி முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இரவு 9 மணியளவில் அடப்பன்குளம் பிரதேசத்திற்கு மாவட்ட செயலாளர் வருகை தந்து மக்களிடம் கலந்துரையாடியதை அடுத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்