மீலாதுன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்டுள்ள செய்திகள்

மீலாதுன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்டுள்ள செய்திகள்

மீலாதுன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்டுள்ள செய்திகள்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2016 | 8:36 pm

இறைத்தூதர் முஹம்மது நபியின் ஜனன தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தமது செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

முஹம்மது நபி அவர்கள் மக்கள் மத்தியில் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் உறுதி செய்யும் நல்லிணக்க செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பல்லின மக்கள் வாழும் இலங்கையில் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அடித்தளமான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் வலியுறுத்திய நபிகளாரின் போதனைகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனவும் ஜனாதிபதி தனது மீலாதுன் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேவளை நபியவர்களின் வாழ்கையை முன்மாதிரியாக கொண்டு எமது வாழ்க்கையையும், முழு உலகையும் அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்வதற்கு இந்நாளில் உறுதி பூணவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீலாதுன் தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள செய்தியிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

தனது வாழ்க்கையினூடாக சகவாழ்வு, சகோதரத்துவம், தாராள தன்மை என்பனவற்றை அடிப்படையாக கொண்ட சிறந்ததோர் மார்க்கத்தையும், வாழ்க்கை வழிமுறைகளையும், ஜனநாயக ஆட்சி முறையினையும் முழு உலகத்திற்கும் முஹம்மது நபி அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் முஹமது நபிகளின் வாழ்க்கை முறையானது ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கருணை, அன்பு, பொறுமை மற்றும் சமத்துவம் என்பவற்றின் முக்கியத்துவம் பற்றியும் முஹம்மது நபி எடுத்துக் கூறியுள்ளதாகும் எதிர்க்கட்சித் தலைவர் தனது மீலாதுன் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கைவாழ் மக்கள் அனைவரும் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு அழகான தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் முஹம்மது நபி அவர்களின் போதனைகளை அமைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்