பொரளை மயான சுற்று வட்டம் டட்லி சேனாநாயக்க சுற்று வட்டம் என பெயர் மாற்றம்

பொரளை மயான சுற்று வட்டம் டட்லி சேனாநாயக்க சுற்று வட்டம் என பெயர் மாற்றம்

பொரளை மயான சுற்று வட்டம் டட்லி சேனாநாயக்க சுற்று வட்டம் என பெயர் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2016 | 7:56 pm

இலங்கை அரசியலில் மனிதநேயமிக்க தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படும் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற அமரர் டட்லி சேனாநாயக்கவின் புதிய உருவச்சிலையொன்று இன்று பொரளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

1936 ஆம் ஆண்டுமுதல் 1973 ஆம் ஆண்டு வரையான அன்னாரின் அரசியல் பயணத்தில், தெதிகம தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான டட்லி சேனாநாயக்க, நான்கு தடவைகள் நாட்டின் பிரதமராகவும் மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

இந்த அசகாய தலைவன் நாட்டின் நான்கு மில்லியன் மக்களின் இறுதி அஞ்சலிக்கு மத்தியில் தமது இறுதிப் பயணத்தை மேற்கொண்டிருந்ததாக லண்டனின் சண்டே டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

நான்கு மில்லியன் மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் இறுதிப் பயணத்தை மேற்கொண்ட இந்த அசகாய தலைவனின் வங்கிக் கணக்கில் இறுதியாக சுமார் நானூறு ரூபாய் மாத்திரமே பணம் மிகுதியாக இருந்தது.

இன்று முதல் பொரளை மயான சுற்று வட்டம் டட்லி சேனாநாயக்க சுற்று வட்டம் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்