கைப்பற்றப்பட்ட  கொக்கெய்ன் கொலம்பியாவிலிருந்து கொண்டுவரப் பட்டிருக்கலாம்

கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் கொலம்பியாவிலிருந்து கொண்டுவரப் பட்டிருக்கலாம்

கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் கொலம்பியாவிலிருந்து கொண்டுவரப் பட்டிருக்கலாம்

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 4:32 pm

கொழும்பு துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கொலம்பியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இந்தியா மற்றும் ஈக்வடோரில் வசிக்கலாம் எனவும் பொலிஸார் அனுமானித்துள்ளனர்.

சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெற்காசியாவிலேயே அதிக கொக்கெய்ன் தொகை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினரால் நேற்று கைப்பற்றப்பட்டது.

எம்.எஸ்.சீ ஃபெபியோலா என்ற பெயரில் போர்த்துக்கலில் பதிவு செய்யப்பட்ட கொள்கலன் அடங்கிய கப்பலொன்றை சோதனையிட்ட போதே கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது

இந்த சோதனையின் போது 928 கிலோகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, கொக்கெய்ன் போதைப்பொருள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன்கள் அடங்கிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தினூடாக இந்தியாவிற்கு சென்றுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் குறிப்பிட்டது.

குறித்த கொள்கலன்களை சோதனையிடுமாறு இந்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்