மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 3:26 pm

பண்டிகைக் காலத்தில் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கு விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்படும் சாரதிகள் தொடர்பில் கடும் சட்ட நடடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்படும் சாரதிகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுற்றிவளைப்புகளின் போது சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை என தெரிவிக்கும் சாரதிகள் தொடர்பில் வாகன போக்குவரத்து திணைக்களத்தினூடாக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

இதனூடாக குறித்த நபருக்கு, ஏற்கனவே சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பின், பொய்யான தகவலை வழங்கிய குற்றச்சாட்டில் சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்