லங்கா ஈ நியூஸ் என்னிடம் பணம் கோரியது: அர்ஜுன ரணதுங்க

லங்கா ஈ நியூஸ் என்னிடம் பணம் கோரியது: அர்ஜுன ரணதுங்க

லங்கா ஈ நியூஸ் என்னிடம் பணம் கோரியது: அர்ஜுன ரணதுங்க

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 8:19 pm

இணையத்தளத்தில் தன்னைப்பற்றி சிறப்பாக எழுதுவதற்கு லங்கா ஈ நியூஸ் தன்னிடம் பணம் கோரியதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

[quote]நான் பொறுப்போடு ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். நாட்டிலுள்ள வர்த்தகர்கள் பலர் இந்த நபருக்கு பணம் வழங்குகின்றனர். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக சேறு பூசுவார்கள். அரசியல்வாதிகளும் பணம் வழங்குகின்றனர். இல்லாவிட்டால் இவர் சேறு பூசுவார். கீழ்த்தரமான ஊடகமாக இதனை இன்று செயற்படுத்துகின்றனர். நான் அந்த நபர் தொடர்பில் அதிகம் கூறத்தேவையில்லை. அவருடன் தொடர்புபட்ட பலரும் இங்குள்ளனர். அவர்களே வழிநடத்துகின்றனர். மக்கள் எந்த நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதை லங்கா ஈ நியூஸைப் பார்க்கும் போது புரிந்துகொள்ள முடியும்[/quote]

என்றார்.

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவை சர்வதேச பொலிஸ் ஊடாகக் கைது செய்து, நீதிமன்றத்திற்கு அவதூறு செய்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்