பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை வரைபு சபாநாயகரால் சமர்ப்பிக்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை வரைபு சபாநாயகரால் சமர்ப்பிக்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை வரைபு சபாநாயகரால் சமர்ப்பிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 3:41 pm

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை அடங்கிய சட்டமூலம், சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒழுக்கக்கோவை தயாரிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவையும் இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் கூடியது.

இதன்போது புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மூவரடங்கிய குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை பேரவையின் தலைவரான பிரதமரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து, நிதி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் ஆரம்பமானது.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்