நிவின் பாலி ஜோடியாகிறார் த்ரிஷா

நிவின் பாலி ஜோடியாகிறார் த்ரிஷா

நிவின் பாலி ஜோடியாகிறார் த்ரிஷா

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 7:17 pm

13 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் நாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் அரவிந்த்சாமியுடன் சதுரங்க வேட்டை-2, கர்ஜனை, மோகினி, விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என த்ரிஷா பிஸியாகவுள்ளார்.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு என்று திரை உலகைக் கலக்கி வரும் அவர், இந்திக்கும் போய் வந்தார். இப்போது மலையாளப் பட உலகில் காலடி எடுத்து வைக்கிறார்.

இவர் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் இது. இதில் பிரேமம் பட நாயகன் நிவின் பாலியின் ஜோடியாகிறார்.

இதை ஷியாமா பிரசாத் இயக்குகிறார். இது த்ரிஷாவின் 60 ஆவது படம்.

இந்நிலையில், நிவின் பாலி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்