இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர் படகுகள்: மத்திய, மாநில அரசுகள் பதில் வழங்க வேண்டுமென உத்தரவு

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர் படகுகள்: மத்திய, மாநில அரசுகள் பதில் வழங்க வேண்டுமென உத்தரவு

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர் படகுகள்: மத்திய, மாநில அரசுகள் பதில் வழங்க வேண்டுமென உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 4:00 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 120 படகுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் வழங்க வேண்டும் என இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரம் திருவாடான் பகுதியைச் சேர்ந்த ஒருவரால் இந்த மனு, இந்திய உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளில், 80 படகுகள் இராமேஸ்வரம் மீனவர்களுக்குச் சொந்தமானவை எனவும் ஒவ்வொரு படகும் சுமார் 30 இலட்சம் இந்திய ரூபா பெறுமதி வாய்ந்தவை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படகுகளை மீட்பதற்கும், இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தமிழக அரசு கடிதம் அனுப்பியதாகவும் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும், இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்