இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் சுமார் 45,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் சுமார் 45,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் சுமார் 45,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 5:32 pm

இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 45,000 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 100 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

சுமார் 45,000 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளதாக இந்தோனேசிய அரசு கூறியுள்ளது.

ஏராளமானோர் தமது உடைமைகளை இழந்துள்ளனர்.

மீட்கப்பட்ட மக்கள் மசூதிகளிலும், பாடசாலைகளிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சில இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

11,000 கட்டிடங்கள் வரை முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய மக்களுக்காக அவுஸ்திரேலிய அரசு நிவாரணப் பணிகளுக்கென ஒரு மில்லியன் டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்