20 வருடங்களாக சுத்தமான குடிநீரின்றி அல்லலுறும் தப்போவ மக்களுக்கு உதவ முன்வந்துள்ள மக்கள் சக்தி

20 வருடங்களாக சுத்தமான குடிநீரின்றி அல்லலுறும் தப்போவ மக்களுக்கு உதவ முன்வந்துள்ள மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2016 | 8:22 pm

மக்கள் சக்தி 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், இன்று மற்றுமொரு சமூகப்பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் – தப்போவ கிராம மக்கள் சுத்தமான குடிநீரின்றி கடந்த 20 வருடங்களாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்களின் அசௌகரியங்களை அறிந்த மக்கள் சக்தி, அதற்கான தீர்வை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தது.

ப்ரண்டிக்ஸ் லங்கா லிமிட்டட் நிறுவனத்தின் ஆதரவுடன் குழாய்க்கிணறு நிர்மாணித்து, நீர்க்கட்டமைப்பினை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்