ஷெவான் டேனியலை சிறையில் அடைப்பதாகக் கூறினர், நாம் அப்போது விமர்சித்தோம் – கே.டி.லால்காந்த

ஷெவான் டேனியலை சிறையில் அடைப்பதாகக் கூறினர், நாம் அப்போது விமர்சித்தோம் – கே.டி.லால்காந்த

எழுத்தாளர் Bella Dalima

07 Dec, 2016 | 9:39 pm

கொழும்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த பின்வருமாறு கருத்து வெளியிட்டார்.

[quote]அப்போதைய அரசாங்கத்தை விமர்சித்தால் வௌ்ளை வேனில் செல்ல நேரிடும் என இப்போதிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். அது தொடர்பில் ஊடகங்கள் பேசவில்லை என்கிறார். இல்லை, பேசுபவர்களும் இருந்தார்கள். நியூஸ்பெஸ்டின் ஷெவான் டேனியலைக் கைது செய்து சிறையில் அடைப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் கோட்டாபய ராஜபக்ஸ கூறினார். ஷெவான் நாட்டில் இருந்து வெளியேறினார். இதனை அனைத்து மேடைகளிலும் நான் கூறினேன். ஜனாதிபதியின் சகோதரர் என்பதாலா அவ்வாறு கூறினார்? அமைச்சின் செயலாளர் ஒருவர் ஷெவான் டேனியலைப் பிடித்து சிறையில் அடைப்பதாக எவ்வாறு கூற முடியும்? அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது என நாம் அப்போது விமர்சித்தோம். ஆனால், மைத்திரி போன்றவர்கள் அதனை கேள்விக்கு உட்படுத்தவில்லை. ராஜித்த போன்றவர்களும் விமர்சிக்கவில்லை. அந்த காலப்பகுதியில் மஹிந்தவை ஊடகங்கள் விமர்சிக்கும்போது சொற்கள் ஒலிபரப்பப்படுவதில்லை. மாறாக பீப் சப்தமே ஒலித்ததை நீங்கள் அறிவீர்கள். கோட்டாபயவின் பெயரைக் கூறும்போதும் பீப் சத்தமே கேட்டது[/quote]

என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்