யாழ்ப்பாணத்திலுள்ள தனியாரின் விவசாயக் காணியிலிருந்து எறிகணைகள் மீட்பு

யாழ்ப்பாணத்திலுள்ள தனியாரின் விவசாயக் காணியிலிருந்து எறிகணைகள் மீட்பு

யாழ்ப்பாணத்திலுள்ள தனியாரின் விவசாயக் காணியிலிருந்து எறிகணைகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2016 | 7:43 am

யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ்ப் பகுதியில் தனியாரின் விவசாயக் காணியொன்றில் இருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் விவசாய நடவடிக்கையை காணி உரிமையாளர் முன்னெடுக்கும் போதே இந்த எறிகணைகள் மீட்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எறிகணைகளை மீட்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இப் பகுதி 1996 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து 2012 ஆம் ஆண்டுவரை இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.
2012 ஆம் ஆண்டு காலத்தில் இப் பகுதி விடுவிக்கப்பட்டு மக்களின் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்திக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்