பிரபல பத்திரிகையாளர் சோ காலமானார்

பிரபல பத்திரிகையாளர் சோ காலமானார்

பிரபல பத்திரிகையாளர் சோ காலமானார்

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2016 | 9:01 am

துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சோ ராமசாமியின் சிகிச்சை பலனின்றி  தனது 82 ஆவது வயதில் இன்று காலமானார்.

அதிகாலை 4.40 மணிக்கு சோ உயிர் பிரிந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சோ காலமானதை அவரது மருத்துவர் விஜய்சங்கர் உறுதி செய்துள்ளார்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்து இரண்டு நாட்கள் முழுமையாக முடிவதற்குள் சோ ராமசாமி உயிரிழந்துள்ளார்.

ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு சிறந்த ஆலோசகராக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்