நோக்கியா மறுபிரவேசம்: அன்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு

நோக்கியா மறுபிரவேசம்: அன்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு

நோக்கியா மறுபிரவேசம்: அன்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Dec, 2016 | 5:01 pm

2017 ஆம் ஆண்டில் அன்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களை நோக்கியா அறிமுகம் செய்யவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தமது மறுபிரவேசத்தை அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நோக்கியா அன்ட்ரோய்ட் ஸ்மார்ட் ஃபோன்கள், சாம்சங் மற்றும் அப்பிள் நிறுவனங்களுக்கு சவாலாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா டி1சி, சி9, இ1, நோக்கியா ஸ்வான், பி1 போன்ற ஐந்து மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா டி1சி யில் 5 – 5.5 அங்குல ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 செயலி, 2ஜிபி / 3ஜிபி ரேம், மற்றும் 16 ஜிபி சேமிப்பு திறன் ஆகியன இருக்கும் எனவும் நோக்கியா சி9: 64-பிட் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820 செயலி, 21 எம்பி பின்பக்க கெமரா, 8 எம்பி முன்பக்க கெமரா கொண்டிருக்கலாம் எனவும் உத்தியோகபூர்வமில்லா செய்திகள் தெரிவிக்கின்றன.

நோக்கியா இ1 இல் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் இண்டெல் ஆட்டம் ப்ராசஸர், ஃபுல் எச்டி 1080பி ரெசெல்யூஷன் மற்றும் 2ஜிபி ரேம், 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 32 ஜிபி சேமிப்பு திறன், 20 எம்பி பின்புற கெமரா, 5 எம்பி முன்பக்க கெமராவைக் கொண்டிருக்கக்கூடும் எனவும்
நோக்கியா ஸ்வான், 5.3 அங்குல டிஸ்ப்ளே, ஸ்னாப்ட்ராகன் 810 அக்டாகோர் செயலி, 4ஜிபி ரேம், 128ஜிபி உள் சேமிப்பு திறன், எல்இடி ப்ளாஷ், 42எம்பி பின்புற கெமராவைக் கொண்டிருக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா பி1 ஆனது 5.3 அங்குல எச்டி ஸ்க்ரீன், ஸ்னாப்டிராகன் 820 செயலி, 3ஜிபி ரேம், 32 ஜிபி இண்டர்னெல் மெமரி, 22.6 எம்பி பின்பக்க கெமரா என்பனவற்றைக் கொண்டிருக்கக்கூடும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்