சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்போருக்கு மருத்துவ அறிக்கை வழங்கும் போது முன்னுரிமை

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்போருக்கு மருத்துவ அறிக்கை வழங்கும் போது முன்னுரிமை

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்போருக்கு மருத்துவ அறிக்கை வழங்கும் போது முன்னுரிமை

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2016 | 10:55 am

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்போருக்கு மருத்துவ அறிக்கை வழங்கும் போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காத சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நுகேகொட தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் தலைவர் டொக்டர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

மருத்துவ அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு நாளொன்றுக்கு 1000 இற்கும் அதிகமான சாரதிகள் வருகைதருவதாக அவர் கூறியுள்ளார்.

அவர்களில் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்போருக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்போருக்கும் தாமதம் இன்றி அவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் தலைவர் டொக்டர் ரோஹன புஷ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்