சவுதி சென்ற 3 பணிப்பெண்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை – வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

சவுதி சென்ற 3 பணிப்பெண்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை – வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

சவுதி சென்ற 3 பணிப்பெண்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை – வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2016 | 1:12 pm

சவுதிக்கு பணிக்குச் சென்றிருந்த மூன்று இலங்கை பணிப்பெண்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பெண்களின் குடும்பத்தினர் இந்த தகவலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஜீ.சூரியகுமாரி, மூதூரை சேர்ந்த எஸ்.எம்.ரய்ஷா மற்றும் உலப்பனையை சேர்ந்த சுமேந்திரா விஜயமெனிக்கே ஆகியோர் தொடர்பிலேயே எவ்வித தகவல்களும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சவுதி தூதரகத்திற்கு உரிய வகையில் அறிவிப்பதற்கு தேவையான விடயங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 011 43 79 328 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உரிய தகவல்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்