சம்பூர் உத்தேச அனல் மின் நிலையக் காணியில் வசிப்பவர்களை  வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

சம்பூர் உத்தேச அனல் மின் நிலையக் காணியில் வசிப்பவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

சம்பூர் உத்தேச அனல் மின் நிலையக் காணியில் வசிப்பவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

07 Dec, 2016 | 5:51 pm

சம்பூரில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட அனல் மின் நிலையத்திற்கு சொந்தமான காணியில் தொடர்ந்து வசித்துவரும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மூதுார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மூதுார் நீதவான் எம்.ரிஸ்வான் முன்னிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பூர் பகுதியில் அமையவிருந்த அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரியைத் துறைமுகத்தில் இருந்து அனல் மின் நிலையத்திற்குக் கொண்டு செல்லவென கடற்கரைச்சேனை கிராமத்தில் காணி ஒதுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்த இந்த காணிக்குள் வசித்துவந்த மூன்று குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு தொடர்ந்தும் மறுத்து வந்த நிலையில், அவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அரசாங்கம் சார்பில் மூதுார் பிரதேச செயலகத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்