கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2016 | 1:43 pm

கொழும்பு நகரின் சில பகுதிகளில் இன்று காலை கடுமையான வாகன நெரிசல் நிலவியிருந்தது.

காலி வீதி, ஹைலெவல் வீதி உள்ளிட்ட பல வீதிகளில் இன்று காலை கடுமையான வாகன நெரிசல் காணப்பட்டது.

பாடசாலை விடுமுறை நாட்களில் இவ்வாறான வாகன நெரிசல் காணப்படுவது தொடர்பில் மக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

சமிஞ்ஞை விளக்குகளில் ஏற்பட்ட கோளாரே வாகன நெரிசல் ஏற்பட காரணமாகும் என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காரணமாகவும் வாகன நெரிசல் ஏற்படுவதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்