உப்பளங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

உப்பளங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

07 Dec, 2016 | 8:51 pm

கிளிநொச்சி – ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆனையிறவு பகுதியில் ஆரம்பமான எதிர்ப்புப்பேரணி, ஏ9 வீதியூடாக ஆனையிறவு உப்பளத்தைச் சென்றடைந்ததுடன், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

நட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளை தனியார் துறையினருக்கு வழங்குவது தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட பிரேரணைக்கு இதன்போது எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்