கருணா அம்மான் பிணையில் விடுதலை

கருணா அம்மான் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2016 | 12:13 pm

அரசாங்க வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து கருணா அம்மானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 50 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் கருணா அம்மான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கருணா அம்மான் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும், அரச வாகனத்தை முறையற்ற ரீதியில் விநாயகமூர்த்தி முரளிதரன் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

மேலும் பதிவு செய்யப்பட்ட இரகசிய இலக்கத்துடன் அந்த வாகனத்தை அவர் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்