ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மூவருக்கு இரட்டை மரண தண்டனை

ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மூவருக்கு இரட்டை மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2016 | 12:31 pm

ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மூன்று குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளிகளுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் விதித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகத்துக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனைப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது

இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பிணை வழங்கப்பட்ட நிலையில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள முதலாம் இரண்டாம் இலக்க குற்றவாளிகளுக்கும் யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் குறித்த இரண்டு பேரையும் உடனடியாக கைது செய்யுமாறும் சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாம் நான்காம் பிரதிவாதிகள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது மூன்றாம் பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்படது.

மேலும் மூன்று குற்றவாளிகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு அதனை செலுத்த தவரும் பட்சத்தில் மேலும் ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்காம் பிரதிவாதி அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்