இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 26 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 26 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 26 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2016 | 11:15 am

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவை இன்று தாக்கிய நிலநடுக்கத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் பலவீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இன்று அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் தங்களது வீடுகளைவிட்டு வெளியில் ஓடி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

சுனாமி தாக்கலாம் என்ற அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல பலர் தயக்கம்காட்டி வருகின்றனர்.

காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதுடன் அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்