க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்: சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்: சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்

எழுத்தாளர் Bella Dalima

06 Dec, 2016 | 7:49 pm

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது.

வரலாற்றில் அதிக எண்ணிக்கையான பரீட்சார்த்திகள் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J. புஷ்பகுமார தெரிவித்தார்.

புதிய மற்றும் பழைய இரண்டு பாடத்திட்டங்களுக்கு அமைவாக இம்முறை பரீட்சை நடத்தப்படுவதுடன், அதற்கென பரீட்சை நிலையங்களும் வெவ்வேறாக அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஏழு இலட்சம் பரீட்சார்த்திகள் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதுடன், 65 ஆயிரத்திற்கும் அதிகமான செயற்குழுவினர் 5600 க்கும் அதிகமான பரீட்சை நிலையங்களில் கடமைக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர, பரீட்சை நிலையங்களை ஒன்றிணைப்பதற்கான 538 இணைப்பு அலுவலகங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J. புஷ்பகுமார கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்