நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு: 16 ஆவது சாட்சியாளரை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவு

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு: 16 ஆவது சாட்சியாளரை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

06 Dec, 2016 | 6:48 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையின் 16 ஆவது சாட்சியாளரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ரவிராஜின் கொலை தொடர்பில் சாட்சிப்பதிவுகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் இன்று 16 ஆவது சாட்சியாளரின் சாட்சியம் பதியப்படவிருந்தது.

இந்த நிலையில், எவ்வித முன்னறிவித்தலுமின்றி சாட்சியம் வழங்க அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் அவரைக் கைது செய்யுமாறு மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லியன ஆராச்சிகே அபேரட்ன என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சர்வதேச ரீதியில் பேசப்படும் முக்கிய வழக்காகக் காணப்படும் இந்த வழக்கு விசாரணைக்கு அறிவிக்காது ஆஜராகாமையானது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என நீதிபதி இன்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்தி வைப்பதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க உத்தரவிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்