வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள  தடை விதிமுறை தொடர்பில் விரைவில் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள  தடை விதிமுறை தொடர்பில் விரைவில் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள  தடை விதிமுறை தொடர்பில் விரைவில் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 12:49 pm

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள புதிய அபராதம் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளல் தொடர்பான சட்டமூலம் ஒரு மாதத்திற்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட பஸ் சங்கங்களுடன் பூர்வாங்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த குழுவின் தலைவர் கூறினார்.

பஸ் சங்கங்களின் யோசனைகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவற்றுடன் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்புகளின் ஆலோசனைகளையும் பெற்று அது தொடர்பான வரவு – செலவுத்திட்ட யோசனைக்கமைய சட்டமூலத்தை தயாரித்து ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக பஸ் சங்கங்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்