முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 6:03 am

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணிக்கு காலமானதாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர், ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 19 ஆம் திகதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஜெயலலிதாவின் இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழந்ததால் அவற்றை இயங்கச் செய்யும் வகையில் அவருக்கு ‘எக்மோ’ என்னும் அதிநவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பகல் 12.45 மணிக்கு வைத்தியசாலையின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜெயலலிதாவின் இரவு 11.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்