மக்கள் சக்தி 100 நாட்கள் ​வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

மக்கள் சக்தி 100 நாட்கள் ​வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

மக்கள் சக்தி 100 நாட்கள் ​வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 7:26 am

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த விசேட நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் 3, மக்கள் சக்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் முதலாவது வேலைத்திட்டமாக குருநாகல், கொபெய்கனே பகுதியில் பாலமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று முற்பகல் 9 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொபெய்கனே, யக்கடபொத்த பகுதியிலிருந்து பொரலுவெவ வரையான வீதியின் வாகொல்ல ஓடைக்கு மேலாகவுள்ள சேதமடைந்த பாலத்தை மறுசீரமைக்கும் பணிகள் மக்கள் சக்தி திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

மக்கள் சக்தி இரண்டாம் கட்டத்தின் மற்றுமொரு வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் பிரதேச செயலகப் பிரிவின் அக்குராண கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த கிராமத்திற்கு 4.5 கிலோமீற்றர் தூரத்திற்கான யானை வேலியை நிர்மாணிப்பதற்கு மக்கள் சக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இன்று பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

காட்டு யானைகளின் அச்சம் நீங்கி அக்குராண மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்த யானை வேலி இன்றியமையாத ஒன்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் மற்றுமொரு வேலைத்திட்டமாக மாத்தறை, தொட்டமுன மீனவர்களுக்கான களங்கரை விளக்கத்தை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த வேலைத்திட்டத்திற்கான பணிகள் இன்று பிற்பகல் 2.30 இற்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்