மக்கள் சக்தி 100 நாட்கள்: மூன்று பகுதிகளில் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

மக்கள் சக்தி 100 நாட்கள்: மூன்று பகுதிகளில் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

06 Dec, 2016 | 8:47 pm

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மூன்று பகுதிகளில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மூன்று திட்டங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் முதலாம் கட்டத்தினூடான மக்களின் கோரிக்கைக்கிணங்க, முக்கியத்துவத்தின் அடிப்படையில் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.

இதன் இரண்டாம் கட்டம் மக்கள் அரங்கு, மற்றும் மக்களின் கோரிக்கையை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றது.

இரண்டாம் கட்டத்தினூடாக குருணாகல் – கொபெய்கனை பாலத்தினை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு – அக்குரானை பிரதேசவாழ் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியதாக மாற்றியிருந்த காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து முற்றுப்புள்ளி பெற்றுக்கொடுக்க இன்று மக்கள் சக்தி முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டது.

4,5 கிலோமீற்றர் தூரம் வரையான பகுதியை ஊடறுத்து யானை வேலி அமைப்பதற்கான ஆரம்ப வைபவம் இன்று இடம்பெற்றது.

இந்த திட்டத்துடன் இலங்கை ஏற்றுமதி கடன் கூட்டுத்தாபனம் கைகோர்த்துள்ளது.

இந்நிகழ்வில் நியூஸ்பெஸ்ட் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, மாத்தறை – தொட்டமுன மீனவர்களது நீண்ட நாள் பிரச்சினையாகத் திகழ்ந்த கலங்கரை விளக்கத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இன்னும் ஓரிரு நாட்களில் மக்களின் பாவனைக்கு ஏற்ற விதத்தில் மாறவுள்ள இந்த செயற்றிட்டங்களூடாக மக்களது வாழ்க்கையை மாற்றுவதே மக்கள் சக்தியின் ஒரே நோக்கமாகும்.

இந்நிகழ்வில் வரையறுக்கப்பட்ட கெப்பிடல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்