நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள்

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள்

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 12:54 pm

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மத்திய மாகாணத்திலும் விசேட நுகர்வோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். நசீர் குறிப்பிட்டார்.

மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நுகர்வோர் விவகார அலுவலகங்கள் சனி, ஞாயிறு உட்பட வாரத்தில் ஏழு நாட்களும் திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிசம்பர் முதலாம் திகதியிலிருநது டிசம்பர் 25 ஆம் திகதி வரை இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 24 மணித்தியாலங்களும் நுகர்வோரின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். நசீர் கூறினார்.

இதேவேளை, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மத்திய மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட 365 சுற்றிவளைப்புகள் ஊடாக சுமார் 135,0000 இற்கும் அதிகமான தொகை அபராதமாக அறவிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்