தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 10:29 am

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் அவருக்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், பதவிப் பிரமாணமும், இரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றதும், 31 அமைச்சர்கள் கூட்டாக பதவியேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி 25 நிமிடங்களில் நிறைவடைந்தது.

பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு ஜெயலலிதாவின் மறைவுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்