ஜெயலலிதா ஜெயராமின் பூதவுடல் இன்று  நல்லடக்கம்

ஜெயலலிதா ஜெயராமின் பூதவுடல் இன்று நல்லடக்கம்

ஜெயலலிதா ஜெயராமின் பூதவுடல் இன்று நல்லடக்கம்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 7:10 am

கடந்த 75 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் நேற்று இரவு 11.30க்கு காலமானார்.

கடந்த 75 நாட்களாக சிகிச்சைப்பெற்றுவந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இருதய நிறுத்தம் காரணமாக தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இதேவேளை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

ஜெயலலிதாவின் பூதவுடல் தாங்கிய பேழை வைத்தியசாலையிலிருந்து சென்னை போயஸ் தோட்டத்தில்
உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

பின்னர் போயஸ் இல்லத்திலிருந்து மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கிற்கு பூதவுடல் கொண்டுசெல்லப்படவுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் பூதவூடல் இன்று மாலை பூரண அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பதவியேற்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்