ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வட மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வட மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 1:26 pm

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமிற்கு வட மாகாண சபையில் இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இரங்கல் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

வட மாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்று காலை 9.45 இற்கு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மறைந்த தமிழக முதலமைச்சருக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

முதலமைச்சரின் இரங்கல் தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் சி. தவராசா வழிமொழிந்தார்.

இதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்றைய அமர்விற்கு கறுப்பு உடையுடன் வருகை தந்து தனது சோகத்தை வெளிப்படுத்தியதோடு, மறைந்த தமிழக முதல்வருக்கு இரங்கல் உரையும் நிகழ்த்தினார்.

தமிழக முதல்வரின் மறைவை முன்னிட்டு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வட மாகாண சபையின் கொடி, இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், சபை அமர்வுகள் நாளை காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்