ஜெயலலிதாவின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவிப்பு

ஜெயலலிதாவின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவிப்பு

ஜெயலலிதாவின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 1:02 pm

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவிக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இரங்கலை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவராக திகழ்ந்தார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய தமிழ் சமூகத்தினரின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த ஒரு தலைவர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமது டுவிட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்

அத்துடன் அன்னாரின் குடும்பத்தாருக்கும், தமிழக மக்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்